×

சில்லி பாயிண்ட்

* இந்தியா ஏ அணிக்கு யஷ் துல் கேப்டன்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆண்கள் ஆசிய கோப்பை 2023 தொடர், கொழும்புவில் ஜூலை 13ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் களமிறங்கும் இந்தியா ஏ அணிக்கு யஷ் துல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ: யஷ் துல் (கேப்டன்), சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா (துணை கேப்டன்), நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), துருவ் ஜுரெல் (கீப்பர்), மானவ் சுதர், யுவ்ராஜ்சிங் டோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ்குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். மாற்று வீரர்கள்: ஹர்ஷ் துபே, நெஹல் வதேரா, ஸ்நெல் படேல், மோகித் ரெட்கர்.

* தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்

இந்திய சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவராக முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள், 4 டி20 மற்றும் 110 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் (21 பந்து) விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையும் இவர் வசம் உள்ளது (2000ல் ஜிம்பாப்வேக்கு எதிராக).

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly ,Yash Dul ,India ,Asian Cricket Council's Emerging Teams ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…